Page Nav

HIDE

Breaking News:

latest

மத்திய அரசா? மாகாண அரசா ? வைத்தியசாலை யார் பொறுப்பில் இருந்தால் என்ன மனித உயிர்கள் முக்கியம் முஹமட் ஆலம்

மன்னார் மாவட்ட வைத்தியசாலை  மாகாண சபை அதிகாரத்தில் இருந்தால் என்ன? மத்திய அரசின் கீழ் இருந்தால் என்ன? மனித உயிர்களே மிகவும் முக்கியமானது என்...

மன்னார் மாவட்ட வைத்தியசாலை  மாகாண சபை அதிகாரத்தில் இருந்தால் என்ன? மத்திய அரசின் கீழ் இருந்தால் என்ன? மனித உயிர்களே மிகவும் முக்கியமானது என்று மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்  முஹமட் ஆலம்  தெரிவித்துள்ளார் 

தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ள மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை  மத்திய அரசா? மாகாண அரசா ? யாருடைய அதிகாரத்தில் இருப்பது எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

இந்த விடயர் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில்  தற்போது இருக்கின்ற  நிலைப்பாடு  பல உயிர்கள் காவு கொண்டதை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம் உதாரணமாக சிந்துஜா ஏனைய தாய்மார்கள் அண்மையில் முசலிப்பகுதியில் இருந்து வைத்தியத்திற்கு வந்த தாய் ஒருவரை சரியான முறையில் பராமரிக்காத நிலையில் அவர் மரணித்திருந்தார்

 இவ்வாறான விடயங்களை  நான் ஒரு குடும்ப தலைவனாக இருந்து பார்க்கிறேன் இவர்களைப் போலவே எனது இரண்டு மகள்களும்  நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தார்கள் அதையும் நான் இங்கு குறிப்பிடுவது சாலச் சிறந்ததாக இருக்கும்

எனது முதலாவது மகள் பிரசவத்திற்காக மன்னர் வைத்தியசாலை சென்றிருந்தபோது அறுவை சிகிச்சை  வசதிகள் இல்லாத படியால் வவுனியாவில் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ருந்தது சத்திர  சிகிச்சையின் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது  தாயும் சேயும் நலமாக இருந்தார்கள் 

அதேபோல் எனது இரண்டாவது  மகள்  இதே பிரச்சனையில் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது  இரத்தப்போக்கு அதிகமாக இருந்த காரணத்தால் அங்கிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டது பிறகு யாழ்பாணத்தில் மகளுக்குரிய மருத்துவ வசதி செய்த பின் தாயும் சேயும் நலமாக்கப்பட்டார்கள். 

இங்கு நான் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் என்னிடம் ஏதோ ஒரு தொழில் வசதி இருந்தபடியால் என்னுடைய மக்களை நான் காப்பாற்ற கூடிய சூழல் இருந்தது  என்னை விட விட அடிமட்ட ஏழைகளாக இருப்பவர்கள் என்ன நிலையில் இருந்திருப்பார்கள் என்று நான் இந்த விடயத்தை யோசித்துத்தான் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை  மத்திய அரசு பொறுப்பெடுத்து அனைத்து வசதிகளும் ஒருங்கமைக்கப்பட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநருக்கு இவ்வாறான ஒரு கடிதத்தை எழுதி இருந்தேன் 

என்றாலும் மாவட்ட பொது வைத்தியசாலை மாகாண அரசின் அதிகாரத்தில் இருப்பதா? அல்லது மத்திய அரசின் அதிகாரத்தில் இருப்பதா? என்ற விவாத  அண்மையில் நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பலவாறு  விவாதிக்கப்பட்டது இங்கு பலரும் பலவாறான கருத்துகளை தெரிவித்திருந்தார்கள் 

எமது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சகல வளங்களும் உள்ள ஒரு வைத்திய சாலையாக  தர முயர்த்த வேண்டும்  ஒரு சிறிய  தேவைக்கும் வவுனியா, யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு  எமது மக்கள் செல்லக் கூடாது  என்ற ஒரு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இந்த கோரிக்கையை முன்வைத்து கௌரவ வடக்கு மாகாண ஆளுநருக்கு இந்த கடிதத்தை நான் எழுதியிருந்தேன் .

 எனவே இங்கே மாகாணமா? மாவட்டமா? மத்திய அரசா? என்ற விவாதத்திற்கு அப்பால் மனித உயிர்கள் மிக முக்கியமானவை என்பதனை வலியுறுத்தி இந்த கடிதம் எழுதி இருந்தேன். இதனை அனைத்து தரப்பினரும் பொது மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று திருஆலம் அவர்கள் தெரிவித்தார் 

No comments